A raid was conducted, as per a complaint received by the Investigation officers of the Consumer Affairs Authority, regarding issuing of re-packed expired cement stock....
With the purpose of building a society which is well consisted with consumer rights responsibilities consumer affairs information division of consumer...
இப்பிரிவானது, வர்த்தக ஒழுங்குவிதி தொடர்பான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகளை மீறுகின்ற அல்லது தவறிழைக்கின்ற வியாபாரிகளை கைது செய்யும் நோக்குடன் சந்தை நுண்ணாய்வுகள் மற்றும் திடீர் சோதனைகளையும் நடாத்தி வருகின்றது. இத்தகைய சந்தை நுண்ணாய்வுகள் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைமையகத்தினாலும் மாவட்ட அலுவலகங்களின் வலையமைப்பினாலும் நடாத்தப்பட்டு வருவதுடன் சட்டத்தில் விதித்துரைக்கப்பட்ட ஏற்பாடுகளை மீறுகின்ற வியாபாரிகள் மீது உரிய நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
சட்ட விதிமுறைகளுக்குட்பட்ட சிறந்த வகையிலான செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக பாஅஅ ஆனது “மாதிரி கடை” அமைப்பு முறையினை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் மாதிரி கடையொன்றினை அமைப்பதற்குரிய தேவையினை நிறைவு செய்யும் பொருட்டு ஒரு தெரிவு அடிப்படையிலான முறைமையொன்றும் விருத்தி செய்யப்பட்டுள்ளது. பாஅஅ ஆனது, சிறந்த வியாபார செயற்பாடுகளை ஊக்குவித்தல் மற்றும் பாவனையாளர் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு தற்போதைய சட்டவிதி மற்றும் “மாதிரி கடை” எண்ணக்கரு ஆகியன தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை வர்த்தக சங்கங்கள், வர்த்தக மன்றங்கள் மற்றும் கம்பனிகளுக்காக நடாத்தி வருகின்றது.
2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் கீழ் தவறிழைத்த வியாபாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் போதுமானளவில் உள்ளன. மேலும், பாதிப்புக்குள்ளான பாவனையாளர்களினால் அனுப்பி வைக்கப்படும் முறைப்பாடுகளைக் கையாள்வதற்கான தத்துவத்தினைக் கொண்டுள்ளோம். பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது, கடந்த சில ஆண்டுகளில் நாடு பூராகவும் அதன் தலைமையலுவலகத்தினாலும் அதன் மாவட்ட அலுவலகங்களின் உத்தியோகத்தர்களினாலும் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடாத்தப்பட்ட திடீர் சோதனைகள் மற்றும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையானது கீழே தரப்படுகின்றது.
முறைப்பாடுகள்
மாதம் | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 |
ஜனவரி | 29 | 61 | 98 | 96 | 78 | 126 | 72 | 74 | 76 | 83 |
பெப்ரவரி | 24 | 92 | 109 | 112 | 119 | 166 | 73 | 75 | 94 | 55 |
மார்ச் | 29 | 118 | 126 | 189 | 189 | 168 | 84 | 72 | 87 | 92 |
ஏப்பிரல் | 31 | 61 | 85 | 118 | 118 | 133 | 55 | 67 | 76 | 87 |
மே | 17 | 64 | 118 | 127 | 127 | 174 | 98 | 126 | 82 | |
ஜூன் | 38 | 109 | 116 | 137 | 137 | 116 | 91 | 91 | 73 | |
ஜூலை | 33 | 112 | 69 | 148 | 148 | 123 | 114 | 110 | 77 | |
ஆகஸ்ட் | 53 | 121 | 127 | 129 | 129 | 123 | 78 | 99 | 78 | |
செப்ரெம்பர் | 55 | 134 | 89 | 113 | 113 | 118 | 79 | 87 | 88 | |
ஒக்டோபர் | 55 | 100 | 108 | 79 | 79 | 106 | 107 | 111 | 84 | |
நவம்பர் | 34 | 101 | 65 | 69 | 69 | 85 | 80 | 69 | 86 | |
டிசம்பர் | 52 | 98 | 89 | 72 | 72 | 82 | 80 | 80 | 87 | |
மொத்தம் | 450 | 1171 | 1199 | 1578 | 1378 | 1145 | 1012 | 1061 | 988 | 317 |
திடீர் சோதனைகள்
மாதம் | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 |
ஜனவரி | 12 | 200 | 189 | 186 | 305 | 119 | 1850 | 3650 | 1247 | 1709 | 149 |
பெப்ரவரி | 16 | 253 | 260 | 217 | 132 | 242 | 1693 | 3318 | 1509 | 2018 | 1371 |
மார்ச் | 23 | 215 | 256 | 235 | 537 | 540 | 1852 | 2958 | 1803 | 2543 | 2351 |
ஏப்பிரல் | 45 | 233 | 487 | 600 | 517 | 321 | 1769 | 2660 | 2181 | 2198 | 2503 |
மே | 38 | 212 | 225 | 214 | 190 | 330 | 1839 | 2934 | 2160 | 2189 | 1905 |
ஜூன் | 27 | 211 | 347 | 203 | 421 | 528 | 3376 | 2027 | 2511 | 2158 | 1966 |
ஜூலை | 109 | 265 | 398 | 250 | 342 | 954 | 3523 | 1976 | 2543 | 2123 | 1716 |
ஆகஸ்ட் | 214 | 430 | 319 | 344 | 451 | 990 | 3903 | 1203 | 2516 | 1902 | 1322 |
செப்ரெம்பர் | 130 | 372 | 203 | 337 | 324 | 1015 | 3482 | 1437 | 2482 | 1701 | 1682 |
ஒக்டோபர் | 71 | 196 | 289 | 274 | 309 | 1171 | 3711 | 2224 | 2513 | 1615 | 1640 |
நவம்பர் | 266 | 197 | 295 | 299 | 396 | 1785 | 5005 | 1843 | 1584 | 1679 | 2320 |
டிசம்பர் | 280 | 500 | 393 | 557 | 393 | 2905 | 4038 | 1516 | 2238 | 567 | 2920 |
மொத்தம் | 1231 | 3284 | 3661 | 3716 | 4517 | 10900 | 36041 | 27746 | 25287 | 22402 | 21,846 |
தண்டப்பணங்கள் (ரூபா.)
மாதம் | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 |
ஜனவரி | 0.00 | 863,700 | 2,956,700 | 2,680,750 | 2,776,000 | 1,626,500 | 8,723,500 | 11,707,650 | 6,496,350 | 6,558,250 | 2,459,500 |
பெப்ரவரி | 0.00 | 1,095,700 | 675,500 | 6977,000 | 1,733,000 | 1,317,500 | 6,355,100 | 9,047,550 | 6,442,800 | 5,532,550 | 2,988,500 |
மார்ச் | 14,000 | 1,060,500 | 1,347,550 | 1,037,000 | 1,102,500 | 1,364,500 | 6,841,100 | 11,389,650 | 7,252,700 | 8,148,000 | 4,584,700 |
ஏப்பிரல் | 8,500 | 378,500 | 1,734,000 | 1,058,500 | 2,201,100 | 533,100 | 2,982,200 | 3,618,200 | 3,970,950 | 3,949,050 | 3,764,500 |
மே | 39,500 | 545,000 | 1,501,500 | 1,667,500 | 2,574,500 | 2,253,500 | 6,403,664 | 8,970,150 | 9,166,400 | 7,591,400 | 7,115,900 |
ஜூன் | 38,000 | 1,528,500 | 2,083,500 | 952,600 | 1,303,000 | 1,109,500 | 7,764,400 | 7,964,700 | 7,815,900 | 6,894,500 | 8,402,900 |
ஜூலை | 303,500 | 847,200 | 2,113,800 | 822,500 | 2,702,000 | 3,310,500 | 7,316,250 | 6,149,600 | 7,977,200 | 7,377,250 | 7,433,500 |
ஆகஸ்ட் | 616,500 | 1,218,750 | 2,149,200 | 1,710,000 | 1,455,500 | 2,263,000 | 7,559,000 | 6,793,500 | 6,110,500 | 5,367,750 | 4,845,000 |
செப்ரெம்பர் | 260,500 | 1,475,500 | 1,294,500 | 3,094,500 | 2,005,500 | 3,391,700 | 10,715,300 | 6,145,700 | 6,847,650 | 6,086,100 | 5,973,500 |
ஒக்டோபர் | 109,000 | 940,600 | 856,500 | 2,018,500 | 1,701,900 | 4,706,700 | 9,379,650 | 7,738,000 | 8,421,950 | 5,362,600 | 7,829,500 |
நவம்பர் | 179,200 | 1,011,500 | 3,115,100 | 1,270,500 | 1,595,000 | 3,790,400 | 9,595,200 | 7,369,050 | 8,030,700 | 5,386,020 | 5,962,000 |
டிசம்பர் | 353,000 | 349,500 | 570,400 | 683,000 | 1,028,100 | 2,842,100 | 5,150,200 | 5,205,900 | 6,127,600 | 4,043,400 | 6,500,500 |
மொத்தம் | 1,921,700 | 11,314,950 | 20,407,250 | 17,692,350 | 22,178,100 | 28,509,000 | 88,485,564 | 92,099,650 | 84,687,700 | 72,296,876 | 67,860,000 |
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பிரதான தொழிற்பாடுகளில் ஒன்று, சிறந்த உடலாரோக்கியம், பாவனையாளர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாத்தல் தொடர்பில் பாவனையாளர்களின் அறிவினை மேம்படுத்துவதேயாகும். பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது, பாவனையாளர்களுக்கு தகவல்களைப் பரப்பும் பொருட்டு பல்வேறு உபாயங்களை இனங்கண்டுள்ளது. அந்தவகையில், பாவனையாளர் அலுவல்கள் மற்றும் தகவல் பிரிவானது அரசாங்க அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக அடிப்படையிலான நிறுவனங்கள், பாவனையாளர் செயற்பாட்டாளர்கள், குடும்பத் தலைவிகள் போன்ற வேறுபட்ட இலக்கு குழுக்களுக்கிடையே வேலைப்பட்டறைகளை நடாத்தி வருகின்றது.
இப்பிரிவானது, அதிகாரசபையின் முதன்மைச் செயற்பாடுகளில் ஒன்றான பிராந்திய மட்டத்தில் பாவனையாளர் அமைப்புக்களை தாபிப்பதினை ஊக்குவித்து வருகின்றது. இத்தகைய பாவனையாளர் அமைப்புக்களினை தாபிப்பதன் நோக்கம், பாவனையாளர் ஒருவர் தான் வசிக்கும் குறித்த பகுதியில் இத்தகைய அமைப்புக்களினூடாக பாவனையாளர் பிரச்சனைகள் தொடர்பில் தமது பாதிப்புக்களுக்கெதிராக குரல் கொடுக்க முடியும் அத்துடன் அவர்கள் பாவனையாளர் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் தெரிந்து கொள்ளவும் முடியும். மேலும், அவர்கள் இத்தகைய அமைப்புக்களினூடாக தமது கிராமம்/நகரத்தில் சட்டரீதியான வியாபாரத்தினை மேம்படுத்துவது தொடர்பில் சரியான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். தற்போது எதிர்கொள்ளும் பிரதான சவால் என்னவெனில், இத்தகைய அமைப்புக்களின் நிலையான தன்மைக்கான உபாயத்தினை வடிவமைப்பதேயாகும்.
தற்போது, பாஅஅ ஆனது, அடிமட்டத்திலிருந்து பாவனையாளர் சங்கங்களை செயற்படுத்துவதற்கான வலையமைப்பினை தாபிப்பதற்கான உபாயங்களை இனங்காணும் பொருட்டு மாவட்ட நிருவாக அமைப்புடன் நெருங்கி பணியாற்றி வருகின்றது.
பாவனையாளர் விழிப்புணர்வின் முக்கியத்துவம்
உன்னிப்பான பாவனையாளரொருவர் பாதுகாப்பான பாவனையாளராவர்!
“அனைத்து அரசாங்க, பொது அல்லது தனியார் தீர்மானங்களினால் பாதிப்புக்குள்ளாகின்ற மிகப்பெரிய குழுவொன்றாக இருக்கின்ற அனைத்து பிரஜைகள் பாவனையாளர்கள் என வரையறுக்கப்படுகின்றனர்.”
ஜோன் எஃப் கென்னடி
ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி
சந்தைப் பொருளாதார தயாரிப்புக்கள் எப்போதும் இலாபங்களை விரிவாக்குவதற்கே முயற்சிக்கின்றன. பால் உற்பத்திகள், இறைச்சி அல்லது மீன் உற்பத்திகள், மரபியல் ரீதியாக மேம்படுத்தப்பட்ட உணவு உற்பத்திகள், பழங்கள், மென்பானங்கள், உணவில் சேர்க்கப்படும் எண்ணெய் போன்ற பல்வேறு பொருட்கள் சந்தையில் கிடைக்கக் கூடியதாகவுள்ளன. ஆனால், துரதிஸ்டவசமாக பாவனையாளர்கள் இத்தகைய பொருட்களின் உள்ளடக்கத்தினை அறிந்திருப்பதில்லை. சில வேளைகளில், தயாரிப்பாளர்கள் மின்சார உபகரணங்கள், சீமெந்து, எல்பி எரிவாயு சிலிண்டர்கள், மின்சார ஆளிகள், சொக்கற்றுக்கள், பற்றறிகள் போன்ற பொருட்களை தயாரிக்குகையில் பாதுகாப்பு ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுவதில்லை. இது உயிராபத்தினை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கின்றது. உணவு காலாவதியாகுதல், செயற்கையாக நிறமூட்டப்பட்ட மரக்கறிகள் மற்றும் பழங்கள் என்பன உடலாரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்றன. தயாரிப்பாளர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம் குறித்து சிறிதளவேனும் சிந்திப்பதில்லை. மக்களின் உடலாரோக்கியம் மற்றும் சூழல் என்பவற்றில் இவை ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து அவர்கள் அக்கறை கொள்வதில்லை. பாவனையாளருக்கு என்ன வேண்டுமென்பதனை சந்தைப் பொருளாதாரமொன்றிலுள்ள உற்பத்தியாளர்களே தீர்மானிக்கின்றனர். பாவனையாளர்கள், விளம்பரப்படுத்துதல் உபாயங்களினால் இன்னொரு வழியிலும் தவறாக வழிநடாத்தப்படுகின்றனர். இன்று நுகர்வு வடிவங்கள் விரைவாக மாற்றமடைந்து வருகின்றன. இதனால், நாம் பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்யும் போது பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்னதாக அதன் விபரங்களை செவ்வை பார்த்துக்கொள்வது அவசியமாகும். நாம் மேற்படி அனைத்து பிரச்சனையையும் கவனத்தில் கொள்ளும்போது பாவனையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஒழுங்கமைக்கப்பட்டதும், முறைப்படுத்தப்பட்டதுமானதாக இருக்கவேண்டும்.
பாவனையாளர்கள் தமது உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானதொன்றாகும். அரசாங்கம் பொருத்தமான சட்டவிதிகளை சட்டமாக்குதல் மற்றும் அவற்றினை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துதல் என்பவற்றின் மூலம் முக்கியமான பங்கினை ஆற்றிவருகின்றது. இவ்விடயத்தில் பாவனையாளர்கள் மிகப் பெரிய பங்கினை வகிக்கின்றனர். அவர்கள் பாவனையாளர்கள் பாதுகாப்பு தொடர்பான அனைத்து சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகள் தொடர்பில் கவனம் செலுத்துதல் வேண்டும். பாவனையாளரின் அறிவானது நீண்டகால நடைமுறையாக இருப்பதால் இச்செயல்முறையில் முக்கியமானதொரு பகுதியாக பாவனையாளர் அறிவூட்டலானது காணப்படுகின்றது.
பாவனையாளர் அறிவூட்டலின் மிக முக்கியமான கட்டமாக பாவனையாளர் உரிமைகள், பொறுப்புக்கள் மற்றும் பாவனையாளர்களின் கடமைகள் என்பனவற்றின் மீதான விழிப்புணர்வு விளங்குகின்றது. பாவனையாளர்கள் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதும், விற்பனை மற்றும் விளம்பரப்படுத்தல் மனோதத்துவத்தினைப் புரிந்துகொள்வதும் கடைரீதியாகவும் மற்றும் விருப்பங்களுக்கும் தேவைகளுக்குமிடையிலான வேறுபாட்டினைக் கண்டறிவதும் கட்டாயமானதாகும்.
பதுளை கல்வெட்டானது, பாவனையாளர் பாதுகாப்பு தொடர்பில் வரலாற்று உண்மையினை வெளிக்கொணருகிறது.
சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பாவனையாளர் உரிமைகள் அமெரிக்காவில் தோற்றம் பெற்றதாகக் கூறப்பட்டபோதிலும் 10 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் செதுக்கப்பட்டதாகக் கூறப்படும் கல்வெட்டில் அடிப்படை உண்மையானது காணப்படுகின்றது. நாம் அந்தக் கல்வெட்டில் கூறப்பட்டிருப்பது உண்மையல்ல எனவும் சிந்திக்கலாம். எவ்வாறாயினும், இந்த விடயங்கள் 10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பதுளை தெம் கல்வெட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஒருநாள் 4 ஆவது உதய மன்னன் மாஹியங்கணை தாதூகோபுரத்தினை தரிசிப்பதற்காக சென்ற போது ஹொபிதிகமுவத்தினைச் சேர்ந்த குடியானவர்கள் மன்னரைச் சூழ்ந்து, மன்னரின் கடைகளின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள், தண்டப்பண தலைவர்கள் எனக் கோசமிட்டதுடன் அவர்களின் பணியாளரின் தண்டப்பணம் செலுத்த வேண்டிய வரி அரசரின் சட்டத்திற்கு முரணான வகையில் இலஞ்சம் என்பவற்றினை அறவீடு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காசியப்ப மன்னனின் காலத்தில் அறவீடு செய்யப்பட்ட வரிக்கமைவாக சேகரிக்கப்படுவதில்லையென்பதனைக் கவனத்திற் கொண்டு வந்தனர். இந்த சிலையானது பதுலு தெம் மடலில் செதுக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பனவு மட்டுமல்லாமல், சமூகவியலுடன் தொடர்புடைய பல்வேறு முக்கியமான விடயங்களையும் கொண்டுள்ளது. பாவனையாளர் உரிமையானது இங்கே உள்ளடக்கியுள்ள விசேட பண்பொன்றாக காணப்படுகின்றது.
மஹியங்கணைக்கு மிகவும் அண்மையில் காணப்படும் சொரபொறவில் ஹொப்பிட்டிகம வர்த்தக கிராமம் கண்டுபிடிக்கப்பட்டது. ஹொப்பிட்டிகம டெம் கல்வெட்டு என இனங்காணப்பட்ட சொரபொற கல்வெட்டிலும் பார்க்க பதுளை கல்வெட்டானது மிகவும் பிரபல்யமானதாகும். 1851 இல் பதுளை மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த ஜோன் பெயிலி அவர்களினால் மழை மற்றும் வெயிலினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பில்லாமல் இருந்த இக்கல்வெட்டினை, பொதுமக்களும் பார்வையிட வேண்டுமென்பதற்காக பதுளை கச்சேரிக்கு (தற்போதைய மக்கள் வங்கி வளாகத்தில்) கொண்டு வந்து கச்சேரிக்கு அண்மையில் அதனை நிறுவி அலங்கரிக்கப்பட்ட மேடையில் பேணிப் பாதுகாக்கப்படுகின்றது. இங்கே விசேட பண்புகளைக் கொண்டுள்ள மேற்குறித்த கல்வெட்டானது, பொதுமக்களுக்கு மிகுந்த மனத்திருப்தியினை அளிக்கக் கூடிய பல்வேறு கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளது.
கல்லானது, 8 அடி மற்றும் 5 அங்குலத்துடன் அ ஆ இ ஈ எனும் நான்கு பக்கங்களையும் முறையே குறித்த பக்கங்களில் 47, 48, 49 மற்றும் 58 வரிசைகளையும் கொண்டுள்ளது. அது கீழே தரப்பட்டுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.
இங்கே கூறப்பட்டுள்ள விடயங்களை பிரதானமாக 4 பகுதிகளாக வகைப்படுத்த முடியுமென கலாநிதி.சேனாரத் பரணவித்தான கூறுகின்றார்.
- தண்டப்பணம் விதித்தல் தொடர்பான சட்டவிதிகள்
- அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்புடைய சட்டவிதிகள்
- வர்த்தக கொள்கை
- பாவனையாளர் உரிமைகள்
ஒவ்வொரு விடயமும் கல்வெட்டுக்களில் தனித்தனியாக செதுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதுடன் இறுதி திருமறையானது, சூரியன், சந்திரன், காகம் மற்றும் நாய் போன்ற குறியீடுகளைக் கொண்டு பூரணப்படுத்தப்பட்டுள்ளன. கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள இத்தகைய குறியீடுகள் சூரியனும் சந்திரனும் இருக்கும் வரையில் காலம் காலமாக தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் என்பதனையும் சட்டத்தினை மீறி நடப்பவர்கள் மறுபிறவியில் காகங்களாகவும் நாய்களாகவும் பிறப்பெடுப்பார்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது. அவர்கள் இழைத்த குற்றத்திற்கான தண்டனையாக நாய்களாகவும் காகங்களுமாக அவர்கள் மறு பிறவி எடுப்பார்கள், என்பதனை அவர்கள் நம்பி பயப்படுவதால் அவர்கள் இச்சட்டத்தினை மீறியிருக்கமாட்டார்கள் என நம்புவதனால், சட்டத்தினை மீறுபவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள்.
இங்கே முன்மாதிரியாக எடுத்துக் கூறப்பட்ட விடயங்களில், பாவனையாளர் பாதுகாப்புடன் தொடர்புடைய சட்டவிதிகள் மற்றும் ஒழுங்கு விதிகள் பின்வருமாறு:
- அரசாங்க வரிஅளவிடல் முறைமையல்லாத வேறு அளவிடல் முறைமையொன்று பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
- அதிகாரமளிக்கப்படாத தராசு மற்றும் நிறையினூடாக (முத்திரையிடும் போது) சட்டத்திற்கு முரணான செயற்பாடு.
- பொருத்தமல்லாத இடங்களில் பொருட்களை விற்பனை செய்தல்
- வியாபாரம் மேற்கொள்ளப்படாத இடங்களில் பொருட்களை விற்பனை செய்தல்
- விற்பனை செய்யத்தகாத பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.
- நடைபாதைகளில் வெற்றிலை மற்றும் பாக்கு போன்றவற்றினை விற்பனைக்காக வைத்திருத்தல்
- உகந்ததல்லாத இடங்களில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவை அரசாங்க அதிகாரிகளினால் அகற்றப்படும்.
- இவ்வாறு உள்ளடங்கியுள்ள பல்வேறு விடயங்களில் ஏதேனுமொரு பிரச்சனையில்லாமல் பிரகடனப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு இரு மடி வரி விதிப்பினை மேற்கொள்ளல்
மேற்படி விடயங்கள், சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாவனையாளர் உரிமைகளை வகுக்கும்போது கவனத்தில் கொண்டு வரப்பட்டன.
மேற்படி விடயங்கள் 2003 அம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாட்டில் உள்ளடங்கியிருந்தன. நடைபாதைகளில் விற்பனை செய்யப்படும் வெற்றிலை மற்றும் பாக்கு தொடர்பில் பாவனையாளர் உடல் நலன் குறித்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளதுடன் அவற்றிற்கு சட்டவாக்கமொன்றினை மேற்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டிருந்தது. வெற்றிலை மற்றும் பாக்கு என்பன மக்களிடையே மிகவும் பிரபல்யம் வாய்ந்தவை. அவை உடனடியாகவே நுகரப்படுவதால் தூய்மையாக வைத்திருக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அவ்வாறே, மன்னராட்சிக் காலத்திலுள்ள கட்டளையானது, தேவைப்படும் நியமங்களுக்கமைவாக இல்லாத நிறைகள் மற்றும் அளவீடுகளின் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டுமெனக் கூறுகின்றது. இச்சட்டமானது, நிறைகள் மற்றும் அளவீட்டுக் கட்டளைச் சட்டத்தினூடாக தற்போதைய காலகட்டத்திற்கேற்ற மாதிரி திருத்தியமைக்கப்பட்டுள்ளது. “பொருட்களை பொருத்தமல்லாத இடங்களில் விற்பனை செய்வதற்கு வைத்திருப்பதோ அல்லது அவற்றினை விற்பனை செய்வதோ கூடாது”, எனக் கூறும் நுகர்வினூடாக நச்சுத் தன்மையினை அடையக்கடியதும் நுகர்வுக்குப் பொருத்தமல்லாத உணவுகளையும் பானங்களையும் விற்பனை செய்வது அல்லது விற்பனை செய்வதனை ஊக்குவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும், என்பது 1862 ஆம் ஆண்டின் 15 ஆம் இல. பொதுமக்கள் தொந்தரவு கட்டளைச் சட்டத்தின்படி மேலும் திருத்தப்படுகின்றது.
10 ஆம் நூற்றாண்டில் முன்னேற்றமடையாத காலகட்டத்தில் பிராமிய எழுத்துக்களில் கல்லில் செதுக்கப்பட்டிருந்த மேற்படி சட்டமானது தற்போது எழுத்து வடிவில்பொது மக்களின் வாழ்வனைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இன்று நாம் பல நூற்றாண்டுளைக் கடந்து தற்போதைய காலகட்டத்திற்கு வந்துள்ளபோதிலும், மன்னராட்சிக் காலத்தில் காணப்பட்ட பலவேறு பொதுவான விடயங்கள் இன்றும் தொடர்ந்து வந்து கொண்டேயுள்ளன. அக்காலகட்டத்தில் சட்டமாக்கப்பட்ட சட்டமானது தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
உசாத்துணை நூல்கள்: