English (UK)SinhalaSriLanka

சமீபத்திய செய்திகள்

Error
  • JUser: :_load: Unable to load user with ID: 395

ஆதரவு பிரிவுகள்

மனிதவள முகாமைத்துவம் மற்றும் நிருவாகப் பிரிவு

மனிதவள முகாமைத்துவ பிரிவானது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நோக்கங்கள் மற்றும் இலக்குகளை அடைவதில் மிகவும் முக்கிமான பங்கினை ஆற்றி வருகின்றது. இதற்கு மேலாக, வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வழிநடாத்திச் செல்லும் அதன் நோக்கம், செயற்பணி, விழுமியங்கள், கம்பனி நடைமுறைகள் மற்றும் காரணிகளை வினைத்திறனுடன் நிறைவேற்றுகின்ற நிறுவனமென்பதனையும் உறுதிப்படுத்திக் கொள்கின்றது.

பிரிவின் முதன்மைத் தொழிற்பாடுகள் பின்வருமாறு:

  • நிறுவனத்திற்கான வினைத்திறன்வாய்ந்த மனிதவள கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை வகுத்தல்
  • ஊழியர்களை ஊக்குவித்தல் மற்றும் ஈடுபடுத்துதலினை விருத்தி செய்தலும் அதிகரித்தலும்
  • மனித வள திட்டமிடலும் ஆட்சேர்ப்பும்
  • வினைத்திறன் வாய்ந்த பதவியினரை வைத்திருக்கும் வகையிலான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றுதல்
  • ஊழியர்களைப் பயிற்சியளித்தலும் விருத்தி செய்தலும்
  • செயல் நிறைவேற்ற மதிப்பீடும் பதவியினரின் செயல் மதிப்பீடும்
  • விருதுகள் மற்றும் அங்கீகாரத்திற்கான திட்டங்களை வகுத்தல்
  • ஒழுக்காற்று நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கையினைப் பின்பற்றுதல்
  • தலைமைத்துவம் மற்றும் ஊழியர்களுக்கிடையிலான தொடர்பாடலை விருத்தி செய்தல்

நிதிப் பிரிவு

இது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் இன்னொரு ஆதரவுப் பிரிவாகும்.

நிதிப்பிரிவானது,

  • நிதிசார் எதிர்வு கூறல்
  • அரச மானியங்களின் முகாமைத்துவம்
    • திறைசேரி மானியங்களை அதிகரிப்பதற்கான கருத்திட்ட திட்டமிடல்
    • முதலீட்டு நிதியத்திலிருந்து அதிகரித்த வருமானத்தினைப் பெறும் முறைகளை இனங்காணுதல்
    • பதிவுக் கட்டணங்களை சேகரித்து கணக்கில் வைத்தலும் நீதிமன்ற தண்டப்பணங்கள் சேவைகளுக்கான கட்டணங்கள் ஆகியவற்றிற்கான முறைமையினை ஏற்படுத்துதல்
  • வரவு செலவுத்திட்டம் மற்றும் வரவு செலவுத் திட்ட கண்ட்டுப்பாட்டினைத் தயாரித்தல்
  • இறுதி கணக்குகளைத் தயாரித்தல்
  • கணக்கீட்டு நியமங்கள், கொள்கைகள் மற்றும் அரசாங்க நிதி ஒழுங்கு விதிகள் என்பவற்றுடன் இணங்கியவாறான காசு முகாமைத்துவமும் ஏனைய நிதிசார் விடயங்களும்
  • ஆதரவு சேவைகளின் வினைத்திறன் வாய்ந்த வழங்கலினைப் பேணுதல்
    • அலுவலக தேவைப்பாடுகளின் பெறுகை
  • நிறுவன ஊழியர்களின்தகமைகளை மேம்படுத்துவதனை உறுதி செய்தல்

உள்ளக கணக்காய்வுப் பிரிவு

எமது பங்களிப்பு

  • உள்ளக கணக்காய்வானது, நிறுவனத்தின் தொழிற்பாடுகளை மேம்படுத்துவதற்கும் பெறுமதி சேர்ப்புக்குமென வழங்கப்பட்ட நோக்க உறுதியளிப்பு உசாவுதல் செயற்பாட்டுடன் கூடிய ஓர் சுயாதீன முறையாகும். இந்நிறுவனமானது, முறையான ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட அணுகுமுறையினை மதிப்பீடு செய்தல் மற்றும் இடர் முகாமைத்துவம், கடப்பாடு மற்றும் ஆட்சிமுறை ஆகியவற்றினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அதன் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள உதவுகின்றது. (வரைவிலக்கணம் II அ )
  • பாஅஅ இன் சொத்துக்களை சிற்நத முறையில் பயன்படுத்துவதற்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் நிருவாகத்திற்கு நாம் இங்கே எமது ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சேவையின் நோக்கெல்லை

  • நிதி மற்றும் தொழிற்பாட்டு தகவல்களின் நம்பகத்தன்மை மற்றும் நல்லிணக்க்ம் என்பனவற்றினை மீளாய்வு செய்தலும் அத்தகைய தொழிற்பாட்டுத் தகவல்களின் விடயத்தினை ஆராயவும் வகைப்படுத்தவும் அறிக்கயைடவும் பயன்படுத்திக் கொள்ளல்
  • கொள்கைகள், திட்டமிடல்கள், நடைமுறைகள், சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளுடனான இணக்கப்பாட்டினை மதிப்பிடுதல்
  • பாஅஅ இன் அனைத்து மூலவளங்களையும் வினைத்திறனுடனும் பயனுறுதியுடனும் பயன்படுத்தப்படுவதனை உறுதி செய்தல்
  • சொத்துக்களின் பௌதீக ரீதியான அமைவிடத்தினை உறுதிப்படுத்துதல் மற்றும் சொத்துக்களினைப் பாதுகாப்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட முறைகளை மதிப்பீடு செய்தல்
  • நிறுவப்பட்ட நோக்கங்கள் மற்றும் இலக்குகள் என்பனவற்றின் நிலையான தன்மையினை உறுதிப்படுத்துவதற்கான தொழிற்பாடுகள் அல்லது நிகழ்ச்சித்திட்டங்களை மீளாய்வு செய்தலும் தொழிற்பாடுகள் அல்லது நிகழ்ச்சித்திட்டங்கள் திட்டமிடப்பட்டவாறு மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது குறித்து ஆராய்தல்
  • ஊழியர்களின் நேர்மையற்ற தன்மை மற்றும் களவு என்பன குறித்து தேவையேற்படும் போது மேற்கொள்ளப்படும் புலனாய்வுக்கு ஆதரவளித்தல்
  • பாஅஅ இன் மனித வள தொழிற்பாட்டு பிரிவுக்கு நேர்மை, உள்ளக கட்டுப்பாடு மற்றும் ஊழல் தொடர்பான விழிப்புணர்வு என்பன தொடர்பில் பயிற்சியளித்தல்

புதுப்பிக்கப்பட்டது: 13-03-2024
காப்புரிமை © 2024 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.
வடிவமைப்பு: Pooranee Inspirations.