பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது 2003 மார்ச் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சான்றுப்படுத்தப்பட்ட 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் மூலம் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களுக்கமைவாக 2003 ஜூலையிலிருந்து அதன் தொழிற்பாடுகளை ஆரம்பித்தது. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டமானது, 1979 ஆம் அண்டின் 1 ஆம் இல. பாவனையாளர் பாதுகாப்பு சட்டம், 1987 ஆம் ஆண்டின் 1 ஆம் இல. நியாய வியாபார ஆணைக்குழு சட்டம் மற்றும் 1950 ஆண்டின் விலை கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியன இரத்துச் செய்யப்பட்டு நியாய வியாபார ஆணைக்குழு மற்றும் உள்நாட்டு வர்த்தக திணைக்களம் ஒழிக்கப்பட்டும் அவற்றிற்குப் பதிலாக அதிகாரசபையானது தாபிக்கப்பட்டது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது, சட்டத்தின் கீழ் அதிகாரசபையின் நோக்கங்களையும் இலக்குகளையும் அடையும் பொருட்டு, தலைவர் மற்றும் கைத்தொழில், சட்டம், பொருளாதாரம், வர்த்தகம், நிருவாகம், கணக்கியல், விஞ்ஞானம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற 10 உறுப்பினர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. தலைவருக்கு மேலதிகமாக 3 முழு நேர உறுப்பினர்களை நியமிக்கும் வகையிலான அதிகாரம் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகாரசபையின் செயலாளராக தொழிற்படுமாறு வேண்டப்படுகின்ற பணிப்பாளர் நாயகம், அதிகாரசபையின் அனைத்து தொழிற்பாடுகளுக்கும் பொறுப்பாக பிரதம நிறைவேற்று உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார்.