அம்பாறை மாவட்டத்தில் பானம பிரதேச செயலாளர் பிரிவில் பொத்துவில் கிராமத்தில் பொத்துவில் நகரத்திற்கு கிழக்கே கடல் கரையில் அமைந்துள்ளது. கடல் அலைகளினால் மணல் மலைகள் குவிந்ததினால் இந்த இடத்திலுள்ள அனேக தொல்பொருட்கள் மணலில் புதையுண்டு இருக்கின்றது. கடற்கரையின் உயர்ந்த இறக்கத்தில் தாது கோபுரத்தின் சிதைவுகளும் கோபுரத்திற்கு மேற்கில் கற் தூணகள் உள்ள கட்டிடத்தின் சிதைவுகளும் காணலாம். அங்கு தலையில்லா நிற்கும் நிலையிலான புத்த சிலையொன்று இருக்கின்றது. இது சிலை மண்டபமாக மதிக்கப் படுகின்றது. இதற்கு தெற்கில் கட்டிடத்தின் சிதைவுகளும் காண முடியும்.