அதிகாரசபையானது, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பில் முறைப்பாடுகளைப்பெற்று வருகின்றது. இச் சேவையினை வழங்குவதன் நோக்கம், பாவனையாளர் சந்தையில் பொருட்களைக் கொள்வனவு செய்கையில் அல்லது சேவைகளைப் பெற்றுக் கொள்கையில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக பாதிப்புக்குள்ளான பாவனையாளர்களுக்கு உதவியளிப்பதேயாகும். அதிகாரசபையானது, பொருட்களைப் போன்றே சேவைகள் குறித்து மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளையும் விசாரணை செய்ய முடியும். அதிகாரசபையானது, அதிகாரசபையினால் தீர்மானிக்கப்பட்ட நியமங்கள் மற்றும் மாதிரிகளுடன் இணங்காத உற்பத்தி, தயாரிப்பு, வழங்கல், களஞ்சியப்படுத்தல், போக்குவரத்து அல்லது ஏதேனும் பொருட்களின் விற்பனை மற்றும் சேவைகளின் வழங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகாரசபையானது, வழங்கப்பட்ட கட்டுறுத்து அல்லது உத்தரவாத்த்துடன் இணங்காத ஏதேனும் பொருட்களின் தயாரிப்பு அல்லது விற்பனை தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்ய முடியும். பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது, அதன் சொந்த தற்துணிவில் அல்லது ஏதேனும் பாவனையாளர் அமைப்பு அல்லது பாவனையாளரினால் மேற்கொள்ளப்படும் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்கின்றது, தனிப்பட்ட பாவனையாளர் அல்லது ஏதேனும் பாவனையாளர் அமைப்புக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் அல்லது தவறான வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்க முடியும். இத்தகைய பிணக்குகளில் பெரும்பாலானவை பிணக்குகளுடன் தொடர்புடைய தரப்புக்களுடன் நேரடியான எழுத்து மூல தொடர்பாடலின் மூலமாகவோ அல்லது கலந்துரையாடல் மற்றும் வாய்மூல தொடர்பாடலின் மூலமாகவோ தீர்க்கப்பட்டுள்ளன.
ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்:
பணிப்பாளர் நாயகம்
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை
இல.27, வொக்ஸோல் வீதி,
கொழும்பு 02.
Call Us : 011-7755456