அதிகாரசபையானது, அதிகாரசபையினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள் மற்றும் பணிப்புரைகளுடன் வியாபாரிகள் இணங்கி நடக்கின்றார்களா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக குற்றங்களுடன் தொடர்புடைய வர்த்தகம் மீது திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய திடீர் சோதனைகளின் மூலம் பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. இச்சோதனைகளின் போது கைது செய்யப்படும் குற்றமிழைத்தவர்களும் பொருட்களும் நீதிமன்றத்தில் கையளிக்கப்படுவதுடன் குற்றமிழைத்தவர்கள் பாஅஅ சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக தண்டிக்கப்படுவார்கள்.