English (UK)SinhalaSriLanka

சமீபத்திய செய்திகள்

Error
  • JUser: :_load: Unable to load user with ID: 395

பிரதான பிரிவுகள்

பாவனையாளர் அலுவல்கள் மற்றும் தகவல் பிரிவு

சந்தை நுண்ணாய்வு

இப்பிரிவானது, வர்த்தக ஒழுங்குவிதி தொடர்பான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகளை மீறுகின்ற அல்லது தவறிழைக்கின்ற வியாபாரிகளை கைது செய்யும் நோக்குடன் சந்தை நுண்ணாய்வுகள் மற்றும் திடீர் சோதனைகளையும் நடாத்தி வருகின்றது. இத்தகைய சந்தை நுண்ணாய்வுகள் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைமையகத்தினாலும் மாவட்ட அலுவலகங்களின் வலையமைப்பினாலும் நடாத்தப்பட்டு வருவதுடன் சட்டத்தில் விதித்துரைக்கப்பட்ட ஏற்பாடுகளை மீறுகின்ற வியாபாரிகள் மீது உரிய நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.

சட்ட விதிமுறைகளுக்குட்பட்ட சிறந்த வகையிலான செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக பாஅஅ ஆனது “மாதிரி கடை” அமைப்பு முறையினை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் மாதிரி கடையொன்றினை அமைப்பதற்குரிய தேவையினை நிறைவு செய்யும் பொருட்டு ஒரு தெரிவு அடிப்படையிலான முறைமையொன்றும் விருத்தி செய்யப்பட்டுள்ளது. பாஅஅ ஆனது, சிறந்த வியாபார செயற்பாடுகளை ஊக்குவித்தல் மற்றும் பாவனையாளர் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு தற்போதைய சட்டவிதி மற்றும் “மாதிரி கடை” எண்ணக்கரு ஆகியன தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை வர்த்தக சங்கங்கள், வர்த்தக மன்றங்கள் மற்றும் கம்பனிகளுக்காக நடாத்தி வருகின்றது.

குற்றத்தின் வகைகள்
  • ஏதேனும் பொருளின் அல்லது விற்பனைக்காக அத்தகைய பொருளொன்றினை உற்பத்தி செய்கையில் அப் பொருளின் லேபலினை அல்லது விபரத்தினை அல்லது விலைக்குறிப்பினை அகற்றுதல், மாற்றுதல், தெரியாதவாறு மறைத்தல் அல்லது அழித்தல் அல்லது சிதைத்தல்
  • பொருட்களின் லேபலிடுதல், விலையிடுதல், தயாரிப்பு, இறக்குமதி, சந்தைப்படுத்தல் மற்றும் களஞ்சியப்படுத்தலுடன் தொடர்புடைய பொதியிடல் நடவடிக்கைகள் தொடர்பில் அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகளில் வழங்கப்பட்ட பணிப்புரைகளை மீறுதல்
  • விலையிடப்பட்ட விலைக்கு மேலாக ஏதேனும் பொருட்களை விற்பனை செய்தல் அல்லது விற்பனை செய்வதற்கு கோருதல்
  • பாஅஅ இனால் தீர்மானிக்கப்பட்ட ஏதேனும் பொருட்கள் மற்றும் சேவைகளுடன் தொடர்புடைய நியமங்கள் மற்றும் மாதிரிகளுடன் இணங்கத் தவறுதல்
  • தயாரிப்பாளர் அல்லது வியாபாரியினால் வழங்கப்பட்ட கட்டுறுத்து அல்லது உத்தரவாதத்துடன் இணங்காத ஏதேனும் பொருட்களைத் தயாரித்தல் அல்லது விற்பனை செய்தல்
  • தயாரிப்பு, இறுக்குமதி, சந்தைப்படுத்தல், களஞ்சியப்படுத்தல், ஏதேனும் பொருளின் விற்பனை அல்லது தயாரிப்பு அல்லது வேறு ஏதேனும் நிலைமைகளுடன் தொடர்புடைய லேபலிடுதல், விலையிடல், பொதியிடல் தொடர்பில் தயாரிப்பாளர்கள் அல்லது வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட பணிப்புரைகளை மீறுதல்
  • இருப்பிலுள்ள பொருட்களை விற்பனை செய்ய மறுத்தல்
  • பொருட்களை இருப்பில் வைத்திருக்க மறுத்தல் மற்றும் கொள்வனவின் போது பாவனையாளர்கள் மீது நிபந்தனைகளை விதித்தல்
  • சாதாரண வர்த்தக தேவைப்பாடுகளுக்கு மிகையாக இருப்புக்களை பதுக்கி வைத்திருத்தல்
  • அதிகாரசபையின் எழுத்துமூல முன் அங்கீகாரமின்றி ஏதேனும் விதித்துரைக்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளின் விலையினை அதிகரித்தல்
  • வியாபார நிலையத்தில் விலைப்பட்டியலை அல்லது விலை விபரப் பலகையினை காட்சிப்படுத்த மறுத்தல் அல்லது தவறுதல்
  • கொள்வனவாளரினால் விற்பனைச் சிட்டை அல்லது பற்றுச் சீட்டினைக் கோரும் போது அதனை வழங்குவதற்கு மறுத்தல் அல்லது தவறுதல்
  • வியாபாரி அல்லது வியாபாரத்தினால் பாவனையாளர் தவறாக வழி நடாத்தப்படுகையில் அல்லது ஏமாற்றப்படுகையில்
  • ஏதேனும் பொருட்கள் அல்லது சேவைகள் குறித்த நியமத்தில், தரத்தில் அல்லது தராதரத்தில் உள்ளதாக அல்லது குறித்த மாதிரியில் அல்லது வடிவத்தில் உள்ளதாக பொய்யுரைக்கப்படும் போது அல்லது குறித்த பொருட்கள் அல்லது சேவைகள் அநுசரணை, அங்கீகாரம், செயல்நிறைவேற்ற பண்புகள், துணைப் பொருட்கள் அல்லது பயன்படுத்துபவர்கள் அல்லது அவை கொண்டிருக்காத பயன்கள் என்பன குறித்து பொய்யான தகவல்களை வழங்குதல்
  • பொருட்கள் மற்றும் சேவைகளின் வழங்கல் மீதான கட்டுறுத்து அல்லது உத்தரவாதத்தில் வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறுதல்
  • போட்டி எதிர் நடவடிக்கைகள் அல்லது தனியுரிமை நடவடிக்கைகள்
  • அதிகாரசபையினால் கேட்கப்படும் பதிவேடுகளை பேணுவதற்கு தவறுதல் அல்லது ஏதேனும் தகவலை வழங்குவதற்கு அல்லது அதன் கடமையினை நிறைவேற்றுவதற்கு அதிகாரசபைக்குத் தேவைப்படும் ஏதேனும் ஆவணத்தினை வழங்க மறுத்தல்
அதிகாரசபையினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் கீழ் தவறிழைத்த வியாபாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் போதுமானளவில் உள்ளன. மேலும், பாதிப்புக்குள்ளான பாவனையாளர்களினால் அனுப்பி வைக்கப்படும் முறைப்பாடுகளைக் கையாள்வதற்கான தத்துவத்தினைக் கொண்டுள்ளோம். பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது, கடந்த சில ஆண்டுகளில் நாடு பூராகவும் அதன் தலைமையலுவலகத்தினாலும் அதன் மாவட்ட அலுவலகங்களின் உத்தியோகத்தர்களினாலும் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடாத்தப்பட்ட திடீர் சோதனைகள் மற்றும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையானது கீழே தரப்படுகின்றது.

முறைப்பாடுகள்

பாவனையாளர் அறிவூட்டல்

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பிரதான தொழிற்பாடுகளில் ஒன்று, சிறந்த உடலாரோக்கியம், பாவனையாளர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாத்தல் தொடர்பில் பாவனையாளர்களின் அறிவினை மேம்படுத்துவதேயாகும். பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது, பாவனையாளர்களுக்கு தகவல்களைப் பரப்பும் பொருட்டு பல்வேறு உபாயங்களை இனங்கண்டுள்ளது. அந்தவகையில், பாவனையாளர் அலுவல்கள் மற்றும் தகவல் பிரிவானது அரசாங்க அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக அடிப்படையிலான நிறுவனங்கள், பாவனையாளர் செயற்பாட்டாளர்கள், குடும்பத் தலைவிகள் போன்ற வேறுபட்ட இலக்கு குழுக்களுக்கிடையே வேலைப்பட்டறைகளை நடாத்தி வருகின்றது.

இப்பிரிவானது, அதிகாரசபையின் முதன்மைச் செயற்பாடுகளில் ஒன்றான பிராந்திய மட்டத்தில் பாவனையாளர் அமைப்புக்களை தாபிப்பதினை ஊக்குவித்து வருகின்றது. இத்தகைய பாவனையாளர் அமைப்புக்களினை தாபிப்பதன் நோக்கம், பாவனையாளர் ஒருவர் தான் வசிக்கும் குறித்த பகுதியில் இத்தகைய அமைப்புக்களினூடாக பாவனையாளர் பிரச்சனைகள் தொடர்பில் தமது பாதிப்புக்களுக்கெதிராக குரல் கொடுக்க முடியும் அத்துடன் அவர்கள் பாவனையாளர் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் தெரிந்து கொள்ளவும் முடியும். மேலும், அவர்கள் இத்தகைய அமைப்புக்களினூடாக தமது கிராமம்/நகரத்தில் சட்டரீதியான வியாபாரத்தினை மேம்படுத்துவது தொடர்பில் சரியான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். தற்போது எதிர்கொள்ளும் பிரதான சவால் என்னவெனில், இத்தகைய அமைப்புக்களின் நிலையான தன்மைக்கான உபாயத்தினை வடிவமைப்பதேயாகும்.

தற்போது, பாஅஅ ஆனது, அடிமட்டத்திலிருந்து பாவனையாளர் சங்கங்களை செயற்படுத்துவதற்கான வலையமைப்பினை தாபிப்பதற்கான உபாயங்களை இனங்காணும் பொருட்டு மாவட்ட நிருவாக அமைப்புடன் நெருங்கி பணியாற்றி வருகின்றது.

கருப்பொருள்

பாவனையாளர் விழிப்புணர்வின் முக்கியத்துவம்

உன்னிப்பான பாவனையாளரொருவர் பாதுகாப்பான பாவனையாளராவர்!

“அனைத்து அரசாங்க, பொது அல்லது தனியார் தீர்மானங்களினால் பாதிப்புக்குள்ளாகின்ற மிகப்பெரிய குழுவொன்றாக இருக்கின்ற அனைத்து பிரஜைகள் பாவனையாளர்கள் என வரையறுக்கப்படுகின்றனர்.”

ஜோன் எஃப் கென்னடி
ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி

சந்தைப் பொருளாதார தயாரிப்புக்கள் எப்போதும் இலாபங்களை விரிவாக்குவதற்கே முயற்சிக்கின்றன. பால் உற்பத்திகள், இறைச்சி அல்லது மீன் உற்பத்திகள், மரபியல் ரீதியாக மேம்படுத்தப்பட்ட உணவு உற்பத்திகள், பழங்கள், மென்பானங்கள், உணவில் சேர்க்கப்படும் எண்ணெய் போன்ற பல்வேறு பொருட்கள் சந்தையில் கிடைக்கக் கூடியதாகவுள்ளன. ஆனால், துரதிஸ்டவசமாக பாவனையாளர்கள் இத்தகைய பொருட்களின் உள்ளடக்கத்தினை அறிந்திருப்பதில்லை. சில வேளைகளில், தயாரிப்பாளர்கள் மின்சார உபகரணங்கள், சீமெந்து, எல்பி எரிவாயு சிலிண்டர்கள், மின்சார ஆளிகள், சொக்கற்றுக்கள், பற்றறிகள் போன்ற பொருட்களை தயாரிக்குகையில் பாதுகாப்பு ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுவதில்லை. இது உயிராபத்தினை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கின்றது. உணவு காலாவதியாகுதல், செயற்கையாக நிறமூட்டப்பட்ட மரக்கறிகள் மற்றும் பழங்கள் என்பன உடலாரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்றன. தயாரிப்பாளர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம் குறித்து சிறிதளவேனும் சிந்திப்பதில்லை. மக்களின் உடலாரோக்கியம் மற்றும் சூழல் என்பவற்றில் இவை ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து அவர்கள் அக்கறை கொள்வதில்லை. பாவனையாளருக்கு என்ன வேண்டுமென்பதனை சந்தைப் பொருளாதாரமொன்றிலுள்ள உற்பத்தியாளர்களே தீர்மானிக்கின்றனர். பாவனையாளர்கள், விளம்பரப்படுத்துதல் உபாயங்களினால் இன்னொரு வழியிலும் தவறாக வழிநடாத்தப்படுகின்றனர். இன்று நுகர்வு வடிவங்கள் விரைவாக மாற்றமடைந்து வருகின்றன. இதனால், நாம் பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்யும் போது பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்னதாக அதன் விபரங்களை செவ்வை பார்த்துக்கொள்வது அவசியமாகும். நாம் மேற்படி அனைத்து பிரச்சனையையும் கவனத்தில் கொள்ளும்போது பாவனையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஒழுங்கமைக்கப்பட்டதும், முறைப்படுத்தப்பட்டதுமானதாக இருக்கவேண்டும்.

பாவனையாளர்கள் தமது உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானதொன்றாகும். அரசாங்கம் பொருத்தமான சட்டவிதிகளை சட்டமாக்குதல் மற்றும் அவற்றினை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துதல் என்பவற்றின் மூலம் முக்கியமான பங்கினை ஆற்றிவருகின்றது. இவ்விடயத்தில் பாவனையாளர்கள் மிகப் பெரிய பங்கினை வகிக்கின்றனர். அவர்கள் பாவனையாளர்கள் பாதுகாப்பு தொடர்பான அனைத்து சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகள் தொடர்பில் கவனம் செலுத்துதல் வேண்டும். பாவனையாளரின் அறிவானது நீண்டகால நடைமுறையாக இருப்பதால் இச்செயல்முறையில் முக்கியமானதொரு பகுதியாக பாவனையாளர் அறிவூட்டலானது காணப்படுகின்றது.

பாவனையாளர் அறிவூட்டலின் மிக முக்கியமான கட்டமாக பாவனையாளர் உரிமைகள், பொறுப்புக்கள் மற்றும் பாவனையாளர்களின் கடமைகள் என்பனவற்றின் மீதான விழிப்புணர்வு விளங்குகின்றது. பாவனையாளர்கள் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதும், விற்பனை மற்றும் விளம்பரப்படுத்தல் மனோதத்துவத்தினைப் புரிந்துகொள்வதும் கடைரீதியாகவும் மற்றும் விருப்பங்களுக்கும் தேவைகளுக்குமிடையிலான வேறுபாட்டினைக் கண்டறிவதும் கட்டாயமானதாகும்.

பாவனையாளர் சட்டத்தின் வரலாறு

பதுளை கல்வெட்டானது, பாவனையாளர் பாதுகாப்பு தொடர்பில் வரலாற்று உண்மையினை வெளிக்கொணருகிறது.

சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பாவனையாளர் உரிமைகள் அமெரிக்காவில் தோற்றம் பெற்றதாகக் கூறப்பட்டபோதிலும் 10 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் செதுக்கப்பட்டதாகக் கூறப்படும் கல்வெட்டில் அடிப்படை உண்மையானது காணப்படுகின்றது. நாம் அந்தக் கல்வெட்டில் கூறப்பட்டிருப்பது உண்மையல்ல எனவும் சிந்திக்கலாம். எவ்வாறாயினும், இந்த விடயங்கள் 10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பதுளை தெம் கல்வெட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஒருநாள் 4 ஆவது உதய மன்னன் மாஹியங்கணை தாதூகோபுரத்தினை தரிசிப்பதற்காக சென்ற போது ஹொபிதிகமுவத்தினைச் சேர்ந்த குடியானவர்கள் மன்னரைச் சூழ்ந்து, மன்னரின் கடைகளின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள், தண்டப்பண தலைவர்கள் எனக் கோசமிட்டதுடன் அவர்களின் பணியாளரின் தண்டப்பணம் செலுத்த வேண்டிய வரி அரசரின் சட்டத்திற்கு முரணான வகையில் இலஞ்சம் என்பவற்றினை அறவீடு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காசியப்ப மன்னனின் காலத்தில் அறவீடு செய்யப்பட்ட வரிக்கமைவாக சேகரிக்கப்படுவதில்லையென்பதனைக் கவனத்திற் கொண்டு வந்தனர். இந்த சிலையானது பதுலு தெம் மடலில் செதுக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பனவு மட்டுமல்லாமல், சமூகவியலுடன் தொடர்புடைய பல்வேறு முக்கியமான விடயங்களையும் கொண்டுள்ளது. பாவனையாளர் உரிமையானது இங்கே உள்ளடக்கியுள்ள விசேட பண்பொன்றாக காணப்படுகின்றது.

மஹியங்கணைக்கு மிகவும் அண்மையில் காணப்படும் சொரபொறவில் ஹொப்பிட்டிகம வர்த்தக கிராமம் கண்டுபிடிக்கப்பட்டது. ஹொப்பிட்டிகம டெம் கல்வெட்டு என இனங்காணப்பட்ட சொரபொற கல்வெட்டிலும் பார்க்க பதுளை கல்வெட்டானது மிகவும் பிரபல்யமானதாகும். 1851 இல் பதுளை மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த ஜோன் பெயிலி அவர்களினால் மழை மற்றும் வெயிலினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பில்லாமல் இருந்த இக்கல்வெட்டினை, பொதுமக்களும் பார்வையிட வேண்டுமென்பதற்காக பதுளை கச்சேரிக்கு (தற்போதைய மக்கள் வங்கி வளாகத்தில்) கொண்டு வந்து கச்சேரிக்கு அண்மையில் அதனை நிறுவி அலங்கரிக்கப்பட்ட மேடையில் பேணிப் பாதுகாக்கப்படுகின்றது. இங்கே விசேட பண்புகளைக் கொண்டுள்ள மேற்குறித்த கல்வெட்டானது, பொதுமக்களுக்கு மிகுந்த மனத்திருப்தியினை அளிக்கக் கூடிய பல்வேறு கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளது.

கல்லானது, 8 அடி மற்றும் 5 அங்குலத்துடன் அ ஆ இ ஈ எனும் நான்கு பக்கங்களையும் முறையே குறித்த பக்கங்களில் 47, 48, 49 மற்றும் 58 வரிசைகளையும் கொண்டுள்ளது. அது கீழே தரப்பட்டுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.

 

இங்கே கூறப்பட்டுள்ள விடயங்களை பிரதானமாக 4 பகுதிகளாக வகைப்படுத்த முடியுமென கலாநிதி.சேனாரத் பரணவித்தான கூறுகின்றார்.

  • தண்டப்பணம் விதித்தல் தொடர்பான சட்டவிதிகள்
  • அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்புடைய சட்டவிதிகள்
  • வர்த்தக கொள்கை
  • பாவனையாளர் உரிமைகள்

ஒவ்வொரு விடயமும் கல்வெட்டுக்களில் தனித்தனியாக செதுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதுடன் இறுதி திருமறையானது, சூரியன், சந்திரன், காகம் மற்றும் நாய் போன்ற குறியீடுகளைக் கொண்டு பூரணப்படுத்தப்பட்டுள்ளன. கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள இத்தகைய குறியீடுகள் சூரியனும் சந்திரனும் இருக்கும் வரையில் காலம் காலமாக தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் என்பதனையும் சட்டத்தினை மீறி நடப்பவர்கள் மறுபிறவியில் காகங்களாகவும் நாய்களாகவும் பிறப்பெடுப்பார்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது. அவர்கள் இழைத்த குற்றத்திற்கான தண்டனையாக நாய்களாகவும் காகங்களுமாக அவர்கள் மறு பிறவி எடுப்பார்கள், என்பதனை அவர்கள் நம்பி பயப்படுவதால் அவர்கள் இச்சட்டத்தினை மீறியிருக்கமாட்டார்கள் என நம்புவதனால், சட்டத்தினை மீறுபவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள்.

இங்கே முன்மாதிரியாக எடுத்துக் கூறப்பட்ட விடயங்களில், பாவனையாளர் பாதுகாப்புடன் தொடர்புடைய சட்டவிதிகள் மற்றும் ஒழுங்கு விதிகள் பின்வருமாறு:

  • அரசாங்க வரிஅளவிடல் முறைமையல்லாத வேறு அளவிடல் முறைமையொன்று பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
  • அதிகாரமளிக்கப்படாத தராசு மற்றும் நிறையினூடாக (முத்திரையிடும் போது) சட்டத்திற்கு முரணான செயற்பாடு.
  • பொருத்தமல்லாத இடங்களில் பொருட்களை விற்பனை செய்தல்
  • வியாபாரம் மேற்கொள்ளப்படாத இடங்களில் பொருட்களை விற்பனை செய்தல்
  • விற்பனை செய்யத்தகாத பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.
  • நடைபாதைகளில் வெற்றிலை மற்றும் பாக்கு போன்றவற்றினை விற்பனைக்காக வைத்திருத்தல்
  • உகந்ததல்லாத இடங்களில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவை அரசாங்க அதிகாரிகளினால் அகற்றப்படும்.
  • இவ்வாறு உள்ளடங்கியுள்ள பல்வேறு விடயங்களில் ஏதேனுமொரு பிரச்சனையில்லாமல் பிரகடனப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு இரு மடி வரி விதிப்பினை மேற்கொள்ளல்

மேற்படி விடயங்கள், சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாவனையாளர் உரிமைகளை வகுக்கும்போது கவனத்தில் கொண்டு வரப்பட்டன.

மேற்படி விடயங்கள் 2003 அம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாட்டில் உள்ளடங்கியிருந்தன. நடைபாதைகளில் விற்பனை செய்யப்படும் வெற்றிலை மற்றும் பாக்கு தொடர்பில் பாவனையாளர் உடல் நலன் குறித்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளதுடன் அவற்றிற்கு சட்டவாக்கமொன்றினை மேற்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டிருந்தது. வெற்றிலை மற்றும் பாக்கு என்பன மக்களிடையே மிகவும் பிரபல்யம் வாய்ந்தவை. அவை உடனடியாகவே நுகரப்படுவதால் தூய்மையாக வைத்திருக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

அவ்வாறே, மன்னராட்சிக் காலத்திலுள்ள கட்டளையானது, தேவைப்படும் நியமங்களுக்கமைவாக இல்லாத நிறைகள் மற்றும் அளவீடுகளின் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டுமெனக் கூறுகின்றது. இச்சட்டமானது, நிறைகள் மற்றும் அளவீட்டுக் கட்டளைச் சட்டத்தினூடாக தற்போதைய காலகட்டத்திற்கேற்ற மாதிரி திருத்தியமைக்கப்பட்டுள்ளது. “பொருட்களை பொருத்தமல்லாத இடங்களில் விற்பனை செய்வதற்கு வைத்திருப்பதோ அல்லது அவற்றினை விற்பனை செய்வதோ கூடாது”, எனக் கூறும் நுகர்வினூடாக நச்சுத் தன்மையினை அடையக்கடியதும் நுகர்வுக்குப் பொருத்தமல்லாத உணவுகளையும் பானங்களையும் விற்பனை செய்வது அல்லது விற்பனை செய்வதனை ஊக்குவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும், என்பது 1862 ஆம் ஆண்டின் 15 ஆம் இல. பொதுமக்கள் தொந்தரவு கட்டளைச் சட்டத்தின்படி மேலும் திருத்தப்படுகின்றது.

10 ஆம் நூற்றாண்டில் முன்னேற்றமடையாத காலகட்டத்தில் பிராமிய எழுத்துக்களில் கல்லில் செதுக்கப்பட்டிருந்த மேற்படி சட்டமானது தற்போது எழுத்து வடிவில்பொது மக்களின் வாழ்வனைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இன்று நாம் பல நூற்றாண்டுளைக் கடந்து தற்போதைய காலகட்டத்திற்கு வந்துள்ளபோதிலும், மன்னராட்சிக் காலத்தில் காணப்பட்ட பலவேறு பொதுவான விடயங்கள் இன்றும் தொடர்ந்து வந்து கொண்டேயுள்ளன. அக்காலகட்டத்தில் சட்டமாக்கப்பட்ட சட்டமானது தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

உசாத்துணை நூல்கள்:

  1. வண.அமரவன்ச தேரர், கொத்மலே – 1969 – லக்டிவாசெல் கல்வெட்டு – குணசேன மற்றும் கொழும்பு
  2. வண.விமலகீர்த்தி தேரர், மெதயங்கொட – 2004 – சீலா ரெக்காட் ஜேர்னல் – எஸ்.கொடகே பிரதர்ஸ் – கொழும்பு
பானையாளர் உரிமைகளும் பொறுப்புக்களும்
  • அடிப்படைத் தேவைகள் குறித்து திருப்திப்படும் உரிமை
    அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளான உணவு, உடை, நீர் மற்றும் சுகாதார நலன் பேணல் மற்றும் வசிப்பிட தேவைகளை அணுகுதல்.
  • பாதுகாப்புக்கான உரிமை
    உடல் ஆரோக்கியத்திற்கு அல்லது உயிருக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள், நடவடிக்கைகள் மற்றும் சேவைகளுக்கெதிரான உற்பத்தியினை பாதுகாத்தல்.
  • The right to be informed
    To get information to make informed choice, and to be protected against dishonest of mislead advertising and labeling
  • தெரிவு செய்வதற்கான உரிமை
    திருப்திகரமான தர உத்தரவாதத்துடன் போட்டி விலைகளில் வழங்கப்படுகின்ற உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளிலிருந்து தெரிவு செய்யப்படக்கூடியதாக இருத்தல்.
  • அறிந்து கொள்வதற்கான உரிமை
    அரசாங்க கொள்கைகளை வகுத்தல் மற்றும் நிறைவேற்றுதல் மற்றும் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளினை விருத்தி செய்தல் போன்றவற்றினை அறிந்து கொள்வதில் அக்கறையுடைய பாவனையாளராக இருத்தல்
  • நிவாரணத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை
    தவறான பிரதிநிதித்துவம், தரமற்ற பொருட்கள் அல்லது திருப்திகரமற்ற சேவைகளுக்கான இழப்பீடு உள்ளடங்கலான கோரிக்கைகளுக்கான நியாயமான தீர்வொன்றினைப் பெறுதல்
  • பாவனையாளர் அறிவூட்டலுக்கான உரிமை
    பொருட்கள் மற்றும் சேவைகளினைப் பற்றிய இரகசியமான தெரிவினை மேற்கொள்வதற்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களை பெற்றுக் கொடுக்கும் அதேவேளையில், அடிப்படை பாவனையாளர் உரிமைகள் மற்றும் கடப்பாடுகளை அறிந்து கொள்ளுதலும் அவை தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்வது என்பதனை புரிந்து கொள்ளுதலும்.
  • ஆரோக்கியமான சூழலுக்கான உரிமை
    தற்கால மற்றும் எதிர்கால தலைமுறைகள் அச்சுறுத்தலில்லாத சூழலில் வாழுதலும் தொழில் புரிதலும்.

போட்டி ஊக்குவிப்பு பிரிவு

பானையாளர் அலுவல்கள் அதிகாரசபை
2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. சட்டம்
பகுதி III
போட்டி மற்றும் பாவனையாளர் நலன்களை மேம்படுத்துதல்

  • உறுப்புரை 34.
    1. அதிகாரசபையானது அதன் சொந்த பிரேரணையின் பேரில் அல்லது எவரேனும் ஆளினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை அல்லது வேண்டுகோளின் பேரில் அல்லது ஏதேனும் பாவனையாளர் நிறுவனம் அல்லது வர்த்தக சங்கத்தினால் ஏதேனும் போட்டி எதிர் நடவடிக்கைகள் குறித்து புலனாய்வினை மேற்கொள்ளலாம்.
    2. உட்பிரிவு (1) இன் கீழ் புலனாய்வானது ஆரம்பிக்கப்பட்டு நூறு நாட்களினுள் அது பூர்த்தி செய்யப்பட வேண்டியது அதிகாரசபையின் கடமையாக இருத்தல் வேண்டும்.
  • உறுப்புரை 35.
    34 ஆம் பிரிவின் நோக்கத்திற்காக, போட்டி எதிர் நடவடிக்கையானது வியாபாரத்தினை நடாத்துகின்ற ஆள். அவருடன் இணைந்துள்ள ஒருவரினால் பின்பற்றப்படுகின்ற நடத்தையுடன் இணைந்து எடுக்கப்படுகின்ற போது அல்லது அதன் நடத்தைக்காக இலங்கையில் சேவைகளின் பாதுகாப்பு அல்லது வழங்கல் அல்லது இலங்கையில் பொருட்களின் உற்பத்தி, வழங்கல் அல்லது கொள்ளலுடன் தொடர்புடைய போட்டியினைக் கட்டுப்படுத்துதல் அல்லது இல்லாமல் செய்தல் அல்லது அதனைத் தடுத்தல் என்பனவற்றினை நோக்கமாகக் கொண்டிருத்தல் வேண்டுமெனக் கருதப்படுதல் வேண்டும்.

போட்டி எதிர் செயற்பாடுகள்

போட்டி எதிர் செயற்பாடுகள் மீதான முறைப்பாடுகளை கையாள்வது தொடர்பில் அதிகாரசபையினால் பின்பற்றப்படும் நடைமுறை

பேரவைக்கு விண்ணப்பிக்குமிடத்து, விசாரணையின் பின்னர் அத்தகைய செயற்பாடானது பொதுமக்களின் நலன்களுக்கு பாதிப்பாக அமையுமாயின், அத்தகைய போட்டி எதிர் செயற்பாடுகளை நிறுத்துவது தொடர்பில் குறித்த தரப்புக்களுக்கு அவற்றின் போட்டி எதிர் செயற்பாடுகளினை நிறுத்துவது தொடர்பில் அதன் கட்டளையினை வழங்குவது பேரவையின் கடமையாகும். அதிகாரசபைக்கு புலனாய்வு நடவடிக்கைகளினை மேற்கொள்வதற்காக மாவட்ட நீதமன்றத்தின் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

விலையிடல் முகாமைப் பிரிவு

சமூக வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாத்தெனக் கருதப்படும் பொருட்கள் அல்லது சேவையானது சட்டத்தின் 18 ஆம் பிரிவின் கீழ் செயற்படும் வகையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சரினால் அத்தகைய பொருளானது, விதித்துரைக்கப்பட்ட பொருளாக விதித்துரைக்கப்படலாம் என்பதுடன் அத்தகைய பொருளானது இலங்கை அரசாங்க வர்த்தமானியில் விதித்துரைகப்பட்ட பொருளாக பிரசுரிக்கப்படுவதுடன் அவ்வாறு விதித்துரைக்கப்பட்ட பொருளின் விலையினை அதிகாரசபையின் முன் அனுமதியின்றி அதிகரிக்க முடியாது. ஏதேனும் விலை மீளாய்வு தொடர்பான விலை விண்ணப்பத்தினை பரிசீலனை செய்வதற்கு 30 நாட்கள் வழங்கப்படுவதுடன் குநித்த தீர்மானமானது உரிய விண்ணப்பதார கம்பனிக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பதாரியினால் சமர்ப்பிக்கப்படும் ஆதரவு ஆவண ரீதியிலான சான்றுப்படுத்தலினை உசாத்துணை செய்வதன் மூலம் விதித்துரைக்கப்பட்ட பண்டமொன்றின் விலை மீளாய்வுகான விண்ணப்பமொன்று கொண்டிருக்கும் கிரய கட்டமைப்ப்னை பரிசோதனை செய்து அதிகாரசபைக்கு பரிந்துரைகளை வழங்குவது விலையிடல் முகாமைப்பிரிவின் முக்கிய தொழிற்பாடாகும். இப்பிரிவானது, கேள்வி மற்றும் நிரம்பல் காரணிகளினால் விலைத்தளம்பல்கள் ஏற்படுகின்றபோதெல்லாம் விலைகளைக் குறைப்பதற்கு அல்லது நடைமுறை மட்டங்களில் அவற்றினை நிலையாகப் பேணும் பொருட்டு இறக்குமதி தீர்வை மாற்றங்கள் உதவு தொகைகள், தள்ளுபடிகள் போன்ற பிசுக்கால் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் உசாத்துணை மேற்கொள்கின்றது.

ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு அதிகாரசபையினால் அங்கீகாரமளிக்க்ப்படும் விலைகள் பண்டத்திற்கு பண்டம் வேறுபடும். விலையினை பரிசோதனை செய்வதன் நோக்கம், விலைகள் கட்டுக்கடங்காமல் கண்டபடி அதிகரிக்கவில்லையென்பதனை உறுதிப்படுத்துவதேயாகும். விலையிடல் முகாமைப் பிரிவின் நோக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைகளைத் தீர்மானிப்பதில் போட்டியினை ஏற்படுத்துவதன் லம் நியாயமான விலையினை நடைமுறைப்படுத்தும், வழிகாட்டும் காரணியாக விளங்குவதேயாகும்.

இப்பிரிவானது அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை ஆய்வு செய்வதுடன் விலையிடல் கொள்கைகள் தொடர்பில் அதிகாரசபைக்கு பரிந்துரைகளையும் வழங்கி வருகின்றது. இப்பிரிவானது, சட்டத்தின் 14 ஆம் பிரிவின் நியதிகளின்படி, தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கிடையில் டன்படிக்கைகளினை மேற்கொள்ளும் போது, உற்பத்தி, வடிவமைப்பு, விலைப் போக்கு, சந்தை நிலைமைகள், சர்வதேச விலைகள் போன்றவற்றினை ஆய்வு செய்த்தன் பின்னர் விலை தொடர்பான பரிந்துரையினை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் துறை தொடர்பில் வினைத்திறன் ஆய்வுகளை மேற்கொள்வது இப்பரிவின் முக்கிய தொழிற்பாடுகளில் ஒன்றாகும்.

அதிகாரசபையின் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ள கோரிக்கை விடுக்கின்ற தயாரிப்பாளர் அல்லது வியாபாரி ஒருவர் அதிகாரசகைகு விண்ணப்பித்தல் வேண்டும்.

விலைப் பொறிமுறை

விலைப்பொறிமுறையினை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாஅஅ சட்டத்தினால் அதிகாரசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள்

(அ) பிரிவு 14 – பொருட்களின் ஆகக்கூடிய விலையினை வழங்குவதற்கான உடன்படிக்கை

அதிகாரசபையானது,
  • ஏதேனும் பொருட்களின் ஆகக்கூடிய விலை
  • விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட, விற்பனை செய்யப்பட்ட அல்லது வழங்கப்பட்ட பொருட்களின் நியமங்கள் மற்றும் மாதிரிகள்
  • தயாரிப்பு, இறக்குமதி, வழங்கல், களஞ்சியப்படுத்துதல், விநியோகம் போக்குவரத்து, சந்தைப்படுத்தல் மற்றும் பொருட்களை லேபலிடுதல் அல்லது விற்பனை செய்தல்
போன்றவற்றினை வழங்குவதற்கு எவரேனும் தயாரிப்பாளர் அல்லது வியாபாரி அல்லது ஏதேனும் தயாரிப்பாளர் அல்லது வியாபாரிகள் சங்கத்துடன் எழுத்துமூலமான உடன்படிக்கையினை மேற்கொள்ளலாம்.
 
(ஆ) பிரிவு 18 – விதித்துரைக்கப்பட்ட பொருட்களின் விலை மீளாய்விற்கான எழுத்து மூல முன் அனுமதி

ஏதேனும் பொருள் அல்லது சேவையானது சுக வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது அல்லது அதன் ஒரு பகுதி என அமைச்சர் கருதுவாராயின், அமைச்சர் அதிகாரசபையுடன் கலந்தாலோசித்து அத்தகைய பொருள் அல்லது சேவையானது விதித்துரைக்கப்பட்ட அத்தகைய பொருள் அல்லது சேவையானது, வித்துரைக்கப்ட்ட பொருட்கள் அல்லது செவைகள் என் அரச வர்த்தமானியில் வெளியிடப்படும்.

வியாபாரிகள் எவரேனும், பாஅஅ சட்டத்தின் பிரிவு 18(1) இன் கீழ் ஏதேனும் விதித்துரைக்கப்பட்ட பொருள் அல்லது சேவையின் சில்லறை அல்லது மொத்த விற்பனை விலையினைத் தீர்மானிக்க முடியாது.
 
(இ) பிரிவு 19 மற்றும் 20 – வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையின் படியான ஆகக்கூகூடிய சில்லறை விலையினை நிர்ணயித்தல்

தயாரிப்பாளர் அல்லது வியாபாரி ஒருவரினால் அங்கீகரிக்கப்பட்ட விலையில் பொருட்களை விற்பனை செய்யப்படாமை அல்லது சேவைகள் அளிக்கப்படாமை பணிப்பாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படுமிடத்து, அத்தகைய விடயத்தினை புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பேரவைக்கு குறிப்பீடு செய்யலாம்.

20(4) ஆம் பிரிவின் கீழ் பேரவையின் பரிந்துரை கிடைக்கப்பெற்றதும், அதிகாரசபையானது ஆகக்கூடிய சில்லறை விலையினை நிர்ணயிப்பதற்கு வர்த்தமானியில் கட்டளையொன்றினைப் பிறப்பிக்கும்.

எவரேனும் தயாரிப்பாளர் அல்ல்து வியாபாரி ஒருவர் விதித்துரைக்கப்பட்ட ஏதேனும் பொருள் அல்லது சேவையின் விலையினை அதிகாரசபையின் முன் அங்கீகாரமின்றி அதிகரிக்க முடியாது. அதிகாரசபையின் அங்கீகாரத்தினைப் பெறுவதற்கு விண்ணப்பதாரி அதிகாரசபைக்கு விண்ணப்பித்தல் வேண்டும்.

இணக்க மற்றும் அமுலாக்கல் பிரிவு

இணக்க மற்றும் அமுலாக்கல் பிரிவானது அதிகாரசபையின் சட்டம் சார்ந்த பிரிவானது விளங்குவதுடன் இது பிரதானமாக 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகளை அமுல்படுத்துவதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ளது. இப்பிரிவின் சில் தொழிற்பாடுகள் பின்வருமாறு.

  • சட்டத்தின் 13(3) மற்றும் 32(4) ஆம் பிரிவுகளின் நியதிகளின்படி, பாவனையாளர் ஏற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை நடாத்துதலும் நீதித்துறையினூடாக அத்தகைய விசாரணைகள் தொடர்பில் வழங்கப்படும் கட்டளைகளை அமுலாக்குதலும்.
  • சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு மரணாக செயற்பட்ட குற்றமிழைத்தவர்களுக்கெதிராக நீதி மன்றத்தில் வழக்குத் தொடருதலும் அதிகாரசபைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட செய்யப்பட்ட வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுதலும்.
  • சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி, அதிகாரசபையின் சார்பில் உடன்படிக்கைகளினை தயாரித்தல், நிறைவேற்றுதல் மற்றும் அமுலாக்குதல்
  • சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி, அரசாங்க வர்த்தமானியில் பணிப்புரைகள் மற்றும் கட்டளைகளை வரைதலும் பிரசுரித்தலும்.
  • சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாக முதல் தடவை செயற்படுபவர்களுக்கெதிராக சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, எச்சரிக்கைகளினைத் தயாரித்தலும்வழங்குதலும்.
  • இலங்கை கட்டளைகள் நிறுவகம் மற்றும் இலங்கை சுங்கத்திணைக்களத்தின் உதவுகையுடன் நாட்டிற்குள் கொண்டுவரும் தரம் குறைந்த பொருட்களைக் கண்காணித்தல்
  • வளவாளர்களாக அவர்களின் அறிவு மற்றும் பங்களிப்பினை அதிகரிக்கும் பொருட்டு தொழிற்பாட்டு பதவியினருக்கு, அதிகாரசபை மற்றும் ஏனைய நிறுவனங்களினால் நடாத்தப்படும் பாவனையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கான அளவிடல்/விழிப்புணர்வு தொடர்பான சட்ட கல்விசார் நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்தலும் நடாத்துதலும்.

நாளாந்த செயற்பாடுகளுக்கப்பால், இப்பிரிவானது, அதிகாரசபையின் அதிகாரங்களை விரிவாக்கும் பொருட்டு நடைமுறையிலுள்ள சட்டத்தின் ஏற்பாடுகளைத் திருத்துவதற்கான பிரேரணைகளை வரைதல், தயாரித்தல் மற்றும் ஏற்பாடுகளின் அமுலாக்கதிலுள்ள தடைகளை நீக்குவதற்கும் பொறுப்பு வாய்ந்ததாகும். இப்பணியினை நிறைவேற்றுவதில் இப்பிரிவானது, பிரேரணைகளைப் பெற்றுக் கொள்ளுதல், வரைதல் மற்றும் பல்வேறு விடயங்களுக்குத் தீர்வு காணும் வகையில் உரிய திணைக்களங்களுடன் (சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைஞர் திணைக்களம்) இணைந்து செயற்படுதல்.

இப்பிரிவுடன் இணைந்துள்ள பாவனையார் முறைப்பாட்டுப் பிரிவானது பின்வருவனவற்றிற்குப் பொறுப்பாகவுள்ளது;

  • இரண்டு தரப்புக்களினாலும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கெதிராக நிவாரணத்தினைப் பெறும் பொருட்டு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் உள்ளடங்கலாக பாவனையாளர் முறைப்பாடுகளைக் கையாளுதல்.
  • பாதிப்புக்குள்ளான பாவனையாளர்களுக்கான விசேட சேவைகள் தொடர்பில் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதில் ஏனைய முறைப்படுத்தப்பட்ட அமைப்புக்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுதல்

புதுப்பிக்கப்பட்டது: 29-11-2024
காப்புரிமை © 2024 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.
வடிவமைப்பு: Pooranee Inspirations.