முகப்பு

தெவிநுவர ரஜமகா விகாரை

மாத்தறை தங்காலை வீதியில் பிரதான வீதியில் மாத்தறையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் தெவிநுவர ரஜமகா விகாரை அமைந்துள்ளது.
புரான உருகுனை ஆட்சி செய்த I வது தப்புல எனும் அரசன் 8 ம் நூற்றாண்டில் செய்வித்த கிஹரெலி பிரிவெனாவாக இந்த விகாரை மதிக்கப்படுகின்றது. தெவிநுவரவில் இருந்து கிடைத்த கல்வெட்டின் படி I வது விஜயபாகு அரசன் (கி.பி. 1055 – 1110) இந்த இடத்தில் இருந்த புரான விகாரையை திருத்தியதற்கான தடயங்கள் இருப்பதன் மூலம் அது இந்த விகாரையாக வேண்டும். நிஸ்ஸங்கமல்ல அரசனின் (கி.பி. 1187 – 1196) கல்வெட்டில் அரசன் தெவிநுவரைக்கு போய் பூஜைகள் செய்ததாக குறிப்பிட்டிருக்கின்றது. வம்ச கதைகளின் படி தம்பதெனியவை ஆட்சி செய்த பண்டிதர் பராக்கிரமபாகு அரசனின் மருமகனான வீரபாகு அரசன் இந்த இடத்தில் நன்தன எனும் பிரிவெனாவை அமைத்துள்ளார். 13 ம் 14 ம் நூற்றாண்டுகளில் இடைகிடை திருத்தல் வேலைகள் செய்த இந்த விகாரை போத்துகேயரின் ஆக்கிரமிப்புகளினால் அழிவடைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை, 03 ஆகஸ்ட் 2012 05:05 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது