அதிகாரசபையின் பிரதான தொழிற்பாடுகளில் ஒன்று, சுகாதாரம், பாதுகாப்பு, பாதுகாப்பளித்தல் பாவனையாளர் உரிமைகள் மற்றும் கடமைகள் மீதான பாவனையாளரின் அறிவினை மேம்படுத்துவதேயாகும். இச் சேவையின் கீழ் பின்வரும் நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்தப்பட்டன.
பாவனையாளர்களின் துயர்களை உடனடியாக துடைக்கும் வகையில், பாவனையாளர்களுக்கு அறிவூட்டும் நோக்கில் பாவனையாளர் சங்கங்களை தாபிப்பது அதிகாரசபையின் முக்கியமான நடவடிக்கையாக அமைகின்றது. இது பொது நலன்களைப் பாதுபாப்பது தொடர்பில் பாவனையாளர்கள் குரல் கொடுக்கும் நோக்கில் பாவனையாளர்களுக்கு வலுவூட்டுவதனை நோக்காகக் கொண்டது. பாவனையாளர் அமைப்புக்களை தாபிப்பதனை மேம்படுத்துகின்ற, உதவியளிக்கின்ற மற்றும் ஊக்குவிக்கின்ற எத்தரப்பிற்கும் அதிகாரசபையானது தனது முழுமையான ஆதரவினை வழங்கும்.