English (UK)SinhalaSriLanka

சமீபத்திய செய்திகள்

கண்ணோட்டம்

நியாயமான சந்தைப் போட்டியினை உறுதிப்படுத்துதல் போன்றவற்றினை மேற்கொள்வதற்கு அதிகாரமளிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அரசாங்க நிறுவனமாகும். இது, 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளது. சட்டமானது, பாவனையாளர் நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாஅஅ இற்கு அதிகாரமளிக்கும் சட்ட ஏற்பாடுகளை கொண்டுள்ளதுடன் பொருட்கள் மற்றும் சேவைகளின் வழங்குனர்களுக்கிடையே பயனுறுதி வாய்ந்த போட்டியினையும் ஏற்படுத்தி வருகின்றது.

எமது நோக்கு

ஒழுக்கம் நிறைந்த வியாபார கலாச்சாரமொன்றின் கீழ் நன்றாக பாதுகாக்கப்பட்ட பாவனையாளர் உலகமொன்றினை அடைதல்

எமது பணி

பாவனையாளருக்கு தத்துவமளித்தல், வர்த்தக ஒழுங்குவிதிகள் மற்றும் ஆரோக்கியமான போட்டியினை ஊக்குவித்தல் மூலம் பாவனையாளர் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல்

எமது ஒருங்கிணைந்த நோக்கங்கள்

  • வியாபார ஒழுங்குபடுத்தல்களினூடாக பாவனையாளரை சிறப்பாக வைத்திருத்தல்
  • நியாயமற்ற வர்த்தக செயற்பாடுகளினால் பாதிக்கப்படுகின்ற பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
  • பாவனையளருக்கு அறிவூட்டுதல் மற்றும் விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் ஆகியவற்றினூடாக பாவனையாளரை வலுவூட்டுதல்
  • வர்த்தக போட்டி எதிர் செயற்பாடுகளுக்கெதிராக வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களைப் பாதுகாத்தலும் போட்டியை ஊக்குவித்தலும்
  • திறனைக் கட்டியெழுப்புவதனூடாக அதிகாரசபை செயற்திறனை மேம்படுத்தல்

ஒருங்கிணைந்த விழுமியங்கள்

  • நம்பிக்கை
  • நேர்மையும் நல்லிணக்கமும்
  • பொறுப்புடமை
  • குழுச் செயற்பாடு
  • அங்கீகாரம்
  • இணக்கப்பாடு
  • கடப்பாடு
  • உருவாக்கமும் புத்தாக்கமும்
புதுப்பிக்கப்பட்டது: 28-06-2024
காப்புரிமை © 2024 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.
வடிவமைப்பு: Pooranee Inspirations.